திருப்பூரில் 12-ம் வகுப்பு மாணவிகளிடம் அத்துமீறிய தேர்வறை பார்வையாளரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
வெங்கமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில், தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் சம்பத்குமார் தேர்வறை பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், தேர்வின்போது 6 மாணவிகளிடம் பிட் உள்ளதா என சம்பத்குமார் சோதனை மேற்கொண்டார்.
அப்போது மாணவிகளிடம் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் தலைமை ஆசிரியரை சந்தித்து புகாரளித்த நிலையில், மகளிர் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பத்குமாரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.