காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளி தேரில் எழுந்தருளி முருகப்பெருமான் அருள் பாலித்தார்.
பங்குனி மாத திருவிழாவையொட்டி நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், முருகப்பெருமானுக்கும் வள்ளி-தெய்வயானைக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனைதொடர்ந்து வெள்ளி திருத்தேரில் வைர, வைடூரிய ஆபரணங்களுடன் எழுந்தருளி உட்பிரகாரத்தை வலம் வந்து காட்சியளித்தார். இதனையடுத்து அரோகரா பக்தி கோஷத்துடன் வெள்ளி தேரினை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.