கடலூர் மாவட்டம், வேப்பூர் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வேப்பூர் வாரச்சந்தையை ஏலம் விடும் நிகழ்வு நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது, வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி அதிகாரிகளுடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பாஜகவினர் கலைந்து சென்றனர். இதனை அடுத்து, வாரச்சந்தை 90 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.