நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே சரக்கு வாகனத்தின் முன் சக்கரம் பழுதடைந்த தார்ச் சாலையில் புதைந்து சாய்ந்த நிலையில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்பகுதியில் உள்ள திருச்செங்கோடு பிரதான சாலை, குடிநீர் குழாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் தோண்டப்பட்டது.
பணிகள் முடிக்கப்படாத நிலையில், அவ்வழியாகச் சென்ற கனரக வாகனத்தின் முன் சக்கரம் சேதமடைந்த சாலையில் புதைந்து சிக்கியது. வாகனம் ஒருபுறமாகச் சாய்ந்து நின்றதால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது.
நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் இதுபோன்று தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு கடும் இன்னலுக்கு ஆளாவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.