உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றும், போட்டியில் பங்கேற்க போதிய வசதியின்றி தவித்து வருவதாக கேரம் விளையாட்டு வீராங்கனை கீர்த்தனா வேதனை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற சீனியர் நேஷனல் கேரம் போட்டியில் வெற்றி பெற்று சென்னை திரும்பிய அவருக்கு வண்ணாரப்பேட்டை மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், தமிழ் ஜனத்திற்குப் பேட்டியளித்த அவர், உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றும், போட்டியில் பங்கேற்கப் பணம் தடையாக உள்ளதாகத் தெரிவித்தார்.
தந்தையை இழந்து வறுமையில் வாழ்ந்து வருவதாகவும், உலகக் கோப்பையில் கலந்து கொள்வதற்குப் பண உதவி செய்தால், கோப்பை வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பேன் எனவும் கூறினார்.