தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் லஞ்சம் கேட்டு தொல்லை கொடுத்ததாகச் சார் பதிவாளரை கண்டித்து, பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு ரியல் எஸ்டேட் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றி வரும் முத்து செல்வன், ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் லஞ்ச வசூலில் ஈடுபட்டு வருவதாகப் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், சார் பதிவாளர் முத்து செல்வனைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், அவர் பட்டியலிட்டு கட்டாய லஞ்சம் வசூல் செய்வதாக ரியல் எஸ்டேட் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.
சார் பதிவாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.