தருமபுரியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குறித்து திமுகவினரே அவதூறு பரப்புவதாக எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தருமபுரி மாவட்டத்தில் பொறுப்பு அமைச்சராக உள்ளார்.
இவர் பதவியேற்று 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இதுவரை மாவட்டத்திற்கு எந்தவித வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ளவில்லை எனவும், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைச் சந்திக்கவில்லை என்றும் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும், அமைச்சர் மீதும், அவரது உதவியாளரான தேவ் ஆனந்த் மீதும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இது தொடர்பாக அமைச்சர் தரப்பில் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், விசாரணைக்காக எஸ்.பி அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் திரண்டதால் அங்குப் பதற்றமான சூழல் நிலவியது.