தேனியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பெரியகுளத்தைச் சேர்ந்த முனீஸ்வரன், கடந்த 2023-ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த சிறுமியைத் தனியாக அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புகாரளித்த நிலையில், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில் முனீஸ்வரன் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து முனீஸ்வரனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி கணேசன் உத்தரவிட்டார்.