இலங்கை – இந்தியா மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக பேச்சுவார்த்தை வவுனியாவில் நடைபெற்று வருகிறது.
இலங்கை – இந்திய மீனவர்களுக்கிடையே அவர்களின் சொந்த முயற்சியில் பேச்சு வார்த்தை நடத்துவது குறித்துக் கடந்த வாரம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இலங்கை வவுனியாவில் இருநாட்டு மீனவர்களுக்கும் இடையே இன்று பேச்சு வார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த பேச்சு வார்த்தையில் இந்தியா சார்பில் 6 மீனவர்கள் கொண்ட குழுவும், இலங்கை சார்பில் 12 பேர் கொண்ட குழுவும் பங்கேற்கின்றனர். தமிழக மீனவர்கள் ஒரு மாத காலம் இலங்கை கடற்பரப்புக்குள் இழுவை மடி மீன்பிடியை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.