திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே ஏரியைத் தூர்வார ஒதுக்கிய 50 லட்சம் ரூபாய் நிதியை அதிகாரிகள் மோசடி செய்ததாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கூக்கல் ஏரியைத் தூர்வாரத் தமிழக அரசு 50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஏரியைத் தூர்வாராமல் விவசாயச் சங்கத் தலைவர் குழு மற்றும் அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டதாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.