திருச்சி மாவட்டம் குமாரவயலூரில், வேளாண் துறை சார்பில் வழங்கப்பட்ட உளுந்து விதைகள் தரமற்று இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர்,லால்குடி, திருவெறும்பூர், துறையூர் உள்ளிட்ட பகுதிகள் 14 பிளாக்குகளாக பிரித்து அரசு சார்பாகத் தனி அதிகாரிகள் நியமித்து விவசாயிகளுக்கு ஆலோசனை மற்றும் பயிர் விளைச்சல் தொடர்பான அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், விவசாயிகளுக்கு உளுந்து விதைகள் வழங்கப்பட்டன. அவற்றைப் பயிரிட்டு வளர்த்து வந்த நிலையில், செடிகளில் செடிகள் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டது. இதனால் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ள விவசாயிகள், பாதிப்பு ஏற்பட்ட நிலங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து ஒரு ஏக்கருக்கு ரூபாய் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.