பொள்ளாச்சி அருகே சொத்தை அபகரிக்கும் வகையில் அடியாட்களுடன் வந்து மிரட்டும் திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்தினர் தஞ்சமடைந்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆத்து பொள்ளாச்சி பகுதியில் உள்ள தோட்டத்தில் செந்தில் வேல் என்பவர் வசித்து வருகிறார்.
செந்தில் வேலுக்கும் அவரது தந்தை விஸ்வநாதனுக்குச் சொத்து பிரச்சனை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சொத்தை அபகரிக்கும் வகையில் திமுக நிர்வாகி அடியாட்களுடன் வந்து மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், அச்சமடைந்த செந்தில் வேல் தனது மனைவி மற்றும் தோட்டத்து ஊழியர்களின் உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தார்.
திமுக நிர்வாகி தொடர்ந்து மிரட்டல் விடுத்துத் தகாத வார்த்தையில் பேசி வருவதாகவும், இது தொடர்பாக காவல்துறையிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.