ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணி, மருத்துவர் இல்லையென கூறி காக்க வைக்கப்பட்ட அவலம் நிகழ்ந்துள்ளது.
ஆற்காடு அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுவாதி. கர்ப்பமாக இருந்த அவருக்கு பிரசவ வலி வந்த நிலையில், இரவு நேரத்தில் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை செவிலியர்கள் உள்ளிட்ட யாரும் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும், இரண்டு மணி நேரம் காக்க வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனையடுத்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சுவாதிக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.
இதனிடையே, அரசு மருத்துவனைகளில் இரவு நேரங்களிலும் போதிய மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.