நடிகர் மனோஜ்ஜின் பூதவுடலுக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார்.
இயக்குனர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இது திரையுலக ரசிகர்கள் மட்டுமின்றி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நீலாங்கரையில் மனோஜ் உடல் வைக்கப்பட்டு உள்ளது. இவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, திரை பிரபலங்கள், உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
உடல் நலக்குறைவால் காலமான, இயக்குநர் இமயம் ஐயா பாரதிராஜா அவர்களின் மகன், மனோஜ் பாரதி பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினோம் என்றும் இந்தக் கடினமான சூழலைக் கடந்து வரும் வலிமையை, அவரது குடும்பத்தினருக்கு இறைவன் வழங்கட்டும். ஓம் சாந்தி! எனத் தெரிவித்துள்ளார்.