ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3 ஆயிரத்து 500 கன அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த 4 நாட்களாக 1,500 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது.
அதன் எதிரொலியாக நீர்வரத்து 3 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியே ரம்மியமாக காட்சியளிக்கிறது.