தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் பேஸ்புக் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் வெளியாகும் தவறான கருத்து மற்றும் ஆபாச படங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கும் நோக்கில் இந்த முடிவை அந்நாட்டு அரசு மேற்கொண்டது. பேஸ்புக்கிற்குத் தடை விதிப்பதன் மூலம் பொதுமக்களின் கருத்து சுதந்திரத்துக்கு பப்புவா நியூ கினியா அரசு கடிவாளம் போடுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
இதற்குப் பதிலளித்துள்ள அந்நாட்டு அமைச்சர், தவறான தகவலில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பது அரசின் கடமை என விளக்கமளித்துள்ளார்.