குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள அரேபியன் கடற்பகுதியில் மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, தனது சக வீரர்களுடன் மோட்டார் படகில் பயணம் செய்து மகிழ்ந்தார்.
ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், வரும் 29-ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் மும்பை அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது.
இதற்கு குஜராத் சென்ற மும்பை அணி வீரர்கள் ரோகித் சர்மா, திலக் வர்மா உள்ளிட்டோர், ஜாம்நகர் கடற்பகுதியில் மோட்டார் படகில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.
அப்போது படகினை ரோகித் சர்மா இயக்கி சென்றார். இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.