கிருஷ்ணகிரியில் இருந்து கிரானைட் கல் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரியின் முன்பக்க டயர் வெடித்ததில் கற்கள் சாலையில் உருண்டு விழுந்தன.
பர்கூர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ், கிரானைட் கற்களை உள்நாடு மற்றும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து வருகிறார். நான்கு ராட்சத கிரைனைட் கற்களை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே சென்ற போது லாரியின் முன்பக்க டயர் வெடித்து கிரானைட் கற்கள் கீழே விழுந்தன. இதனையறிந்து அங்குச் சென்ற தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.