வாணியம்பாடி அருகே மலை கிராமத்தைச் சேர்ந்த 3 குடும்பங்களை திமுக ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட நெக்னாமலை கிராமத்தில் 170க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கே திமுகவை சேர்ந்த பரிமளா முருகன் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகிக்கிறார்.
இவருடன் கிராம நிர்வாகிகளாக செயல்படும் காசி, வேலுமணி, முருகேசன் உள்ளிட்டோரும் கோயில் பணத்தை கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்ட முன்னாள் நிர்வாகி மார்கபந்து என்பவரின் குடும்பம் உட்பட 3 குடும்பங்களை ஊரை விட்டே ஒதுக்கி வைத்துள்ளதாகவும் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கெற்க அனுமதி மறுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்பவர்களையும் மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.