2025-26 ஆம் நிதியாண்டிற்கான திருச்சி மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாமன்ற கூட்டரங்கில் மேயர் அன்பழகன் முன்னிலையில் நிதிக்குழு தலைவர் முத்து செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், 128 கோடியே 95 லட்சம் ரூபாய் பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது பட்ஜெட்டில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாகக்கூறி அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.