திருப்பத்தூர் அருகே வீட்டுக் கடனை திருப்பி செலுத்ததாக நபரை தாக்கி, ஆபாசமாக பேசிய தனியார் நிதி நிறுவன ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலப்பட்டு அருகே நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த சத்தியநாராயணன் என்பவர் தனியார் நிதி நிறுவனத்திடம் 5 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றுள்ளார். 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் திருப்பி செலுத்த வேண்டிய நிலையில், நிதி நிறுவன ஊழியர்கள் சத்தியநாராயணன் வீட்டுக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சத்தியநாராயணனை கடுமையாக தாக்கிய அவர்கள், அவரது மனைவி மற்றும் மகள் குறித்து ஆபாசமாக பேசியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த சத்தியநாராயணன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவன ஊழியர்களை கைது செய்தனர்.