விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வந்தடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடல் எல்லை பாதுகாப்பு, போதைப் பொருள் இல்லா சமூகம், மீனவர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சைக்கிளில் பேரணியாகச் செல்கின்றனர்.
குஜராத்தில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் இந்த பேரணி கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. சென்னை வந்தடைந்த சைக்கிள் பேரணி, கிழக்கு கடற்கரைச் சாலை வழியாகச் சென்றபோது மரக்காணம் காவல்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.