ஜார்க்கண்ட் பாஜக நிர்வாகி அனில் டைகர் படுகொலையைக் கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
பாஜக நிர்வாகியும், முன்னாள் ஜிலா பரிஷத் உறுப்பினருமான அனில் டைகர் ராஞ்சியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், படுகொலையைக் கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.