சூடானில் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த தலைநகர் கார்டூமை ராணுவம் கைப்பற்றியுள்ளது.
சூடான் நாட்டில் 2021ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதி முயற்சி மேற்கொண்டார்.
இதனால், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்நிலையில், துணை ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த சூடான் தலைநகர் கார்டூமை ராணுவம் கைப்பற்றியுள்ளது.