ஆதிதிராவிடர் பழங்குடியின தொழில் முனைவோர் திட்ட விண்ணப்பங்கள் 85 சதவிகிதம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஐ. மூலம் தகவல் வெளியாகி உள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் 2023ம் ஆண்டில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் துவக்கப்பட்டது.
இத்திட்டத்திற்காக வங்கியில் பயனாளர்கள் பெறும் கடன் தொகையின் அடிப்படையில் இயந்திரங்களையும், கருவிகளையும் கொள்முதல் செய்வதற்காக 35% மூலதன மானியமும், 6% வட்டி மானியமும் வழங்கப்படும்.
2024-25 பட்ஜெட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் கீழ் இத்திட்டத்துக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
திட்டம் துவங்கப்பட்ட 2023 மார்ச் முதல் 2024 டிசம்பர் வரை பயன்பெற்றவர்கள் விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் கேட்டிருந்தார்.
அதில் மொத்தம் 17,629 நபர்கள் விண்ணப்பித்த நிலையில், வெறும் 2,295 நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதாவது 85 சதவிகித விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஐ. மூலம் தகவல் வெளியாகி உள்ளது.