ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் பேட் கம்மின்ஸ் தலைமையில் களமிறங்கும் ஹைதராபாத் அணி, டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா என பலமான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது.
மற்றொரு புறம் ரிஷப் பண்ட் தலைமையில் களமிறங்கும் லக்னோ அணி, தனது முதல் போட்டியில் நூலிழையில் தோல்வியை தழுவியது. எனவே ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தி லக்னோ அணி முதல் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.