டெல்லி கல்காஜி தொகுதி தேர்தல் வெற்றிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதலமைச்சர் அதிஷி பதிலளிக்குமாறு உயர்நீதிமன்றம் நோ்டடீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த மாதம் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் தோல்வி அடைந்த நிலையில், கல்காஜி தொகுதியில் அதிஷி வெற்றி பெற்றார்.
இந்நிலையில், அதிஷியும் அவரது தேர்தல் முகவர்களும் தேர்தலின்போது ஊழல் நடைமுறைகளைப் பின்பற்றியதாகக் கூறி கல்காஜி தொகுதியைச் சேர்ந்தவர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பாகத் தேர்தல் ஆணையம், டெல்லி காவல்துறை, அதிஷி, கல்காஜி தொகுதியின் தேர்தல் அதிகாரி ஆகியோர் பதிலளிக்க நீதிபதி நோட்டீஸ் அனுப்பினார்.