பொதுமக்களின் சொத்துக்களை வக்ஃபு வாரியம் அபகரிக்க திமுக அரசு துணை போவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இஸ்லாமியர்களின் வாக்குகளுக்காகத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளை திமுக அரசு மறுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் சட்டப்படி வாங்கி பதிவு செய்த சொத்துக்களை வக்ஃபு வாரியம் அபகரிப்பது குறித்து பாஜகவைத் தவிர வேறு எந்த கட்சியும் பேசவில்லை எனத் தெரிவித்துள்ள அவர்,
வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகத் தமிழக அரசு நிறைவேற்றும் தீர்மானம் மக்களுக்கு விரோதமானது எனத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் சொத்துக்களை வக்ஃபு வாரியம் அபகரிக்க திமுக அரசு துணை போவதாகவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.