சேலம் மாநகராட்சி கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுக்கும் திமுக அரசு வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. மேலும், தமிழில் பெயர்ப் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராதமும் விதித்து வருகிறது.
இந்த நிலையில், சேலம் மாநகராட்சி கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தன. இதனால் அவற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை என திமுக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.