ரஷ்யாவில் சிறிய ரக விமானம் தரையிறங்கியபோது ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளானது.
அந்நாட்டின் நோவி யுரெங்கோய் நகரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள விமான நிலையத்தின் ஓடு பாதையில் பனிக்கட்டிகள் நிறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்கியபோது அதன் பாதையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானது. எனினும் விமானத்திலிருந்த 8 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.