சீனாவின் ஜின்ஜாங் மாகாணத்தில் திடீரென்று புழுதி புயல் வீசியது.
இதன் காரணமாகத் தலைநகர் முழுவதிலும் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களில் புழுதி படித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோர்லா நகரில் மோசமான புழுதி புயல் தாக்கியுள்ளது.
புழுதி புயல்கள் ஏற்படுவதைத் தடுக்க நகரம் முழுவதும் மரங்கள் நடப்பட்டு வருகிறது. இருப்பினும், நகர் விரிவாக்கம், தொழிற்சாலைகள் உள்ளிட்ட காரணங்களால் புழுதி புயலைச் சீனாவால் கட்டுப்படுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது.