ஜப்பானில் சூறைக்காற்றால் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அந்நாட்டின் டோஹோகு பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. குறிப்பாக ஷிரோஷி நகரில் மணிக்கு 78 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த சூறைக்காற்றில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.