ஜம்மு-காஷ்மீரின் கதுவா பிராந்தியத்தில் போலீசார்- பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
எல்லை பாதுகாப்புப் படையினருடன், அம்மாநில போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜ்பாக்கின் காதி ஜூதானா பகுதியில் பாதுகாப்புப் படையினரைக் கண்டதும், தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.