மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அரசு கொள்முதல் நிலையங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
அய்யங்கோட்டை கிராமத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், தாங்கள் அறுவடை செய்த நெல்-ஐ விற்பனைக்காக விவசாயிகள் குவித்து வைத்துள்ளனர்.
நெல் கொள்முதல் செய்யும் அதிகாரிகளுக்குப் பலமுறை தகவலளித்தும், நெல்-ஐ வாங்க அவர்கள் வராததால் நெல் மூட்டைகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அறுவடை செய்து 20 நாட்களாவதால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கின்றன.
மழை பெய்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால், இப்பிரச்சனைக்குத் தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.