கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆறு மாசடைந்தது தொடர்பாகத் தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானதன் எதிரொலியாக அவ்விடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சிறுமுகை பகுதியில் ஓடும் பவானி ஆற்றின் நீர் சுத்திகரிக்கப்பட்டு அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்குக் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக ஆற்றின் ஒரு பகுதியில், தண்ணீர் மாசடைந்து மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறது. இதுகுறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டு அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து செய்தி எதிரொலியாக, சம்பவ இடத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மஞ்சள் நிறத்தில் காட்சியளித்த ஆற்றுநீர் மாதிரியைச் சோதனைக்காக எடுத்துச் சென்றனர்.