நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கூலித் தொழிலாளர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் விசைத்தறி கூடங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தினக்கூலி மற்றும் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், கஞ்சா விற்பனையாளர்களிடம் தொழிலாளர்கள் கஞ்சாவை வாங்கிச் செல்வது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.