மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே காவலரை கல்லால் தாக்கி கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார், உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் பணி முடிந்து மது அருந்துவதற்காக முத்தையன்பட்டியில் உள்ள மதுக் கடைக்கு சென்றிருந்தார்.
அப்போது கஞ்சா வழக்கில் சிறை சென்ற பொன்வண்டு என்பவருக்கு முத்துக்குமார் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் பொன்வண்டு தரப்பினருக்கும், முத்துக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் முத்துக்குமாரை பொன்வண்டுவின் நண்பர்கள் கல்லால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து பொன்வண்டு மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.