கடலூரில் மாணவி இறங்குவதற்கு முன்பே பேருந்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேவனாம்பட்டினம் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர், வீடு திரும்புவதற்காக அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். வன்னியர்பாளையத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் மாணவி இறங்க முயன்றபோது, ஓட்டுநர் பேருந்தை இயக்கியதால் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அலட்சியமாக செயல்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.