சேலம் அருகே கோயில் திருவிழாவின்போது அக்னிக் குண்டத்தில் பூசாரி தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குமார சாமிப்பட்டியில் உள்ள எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் அலகு குத்தியும், ஆடு, கோழிகளைப் பலியிட்டும் அக்னிக் குண்டத்தில் இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்நிலையில், அம்மன் விக்கிரகத்துடன் கோயில் பூசாரி அக்னிக் குண்டத்தில் இறங்கினார். அப்போது கால் தடுமாறி அவர் குண்டத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.