குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைத்து உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இந்தியா திகழ்வதாக ஐநா பாராட்டு தெரிவித்துள்ளது.
ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தை இறப்புகளை குறைப்பதில் இந்தியா, நேபாளம் உள்ளிட்ட 5 நாடுகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையில் இந்தியா பெரும் முதலீடுகளை செய்து லட்சக்கணக்கான இளம் உயிர்களை காத்துள்ளதாகவும், கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து 5 வயதுக்குக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 70 சதவீதம் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் பிறந்த 28 நாள்களுக்குள் இறக்கும் குழந்தைகளின் விகிதமும் ஒரு சதவீதமாக குறைந்துள்ளதாக ஐநா குறிப்பிட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச பிரசவம் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளை இந்தியா மேற்கொண்டு வருவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் ஆரோக்கியமான முறையில் குழந்தைகள் பிறப்பதை இந்தியா உறுதி செய்து வருவதாகவும் ஐநா புகழாரம் சூட்டியுள்ளது.