கேரள மாநிலம் தேக்கடியில் ஒரு லட்சம் மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட 17-வது மலர் கண்காட்சி காண்போரைக் கவர்ந்து வருகிறது.
தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள தேக்கடியில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் மலர் கண்காட்சி நடைபெறும்.
அந்த வகையில் தேக்கடி – குமுளி சாலையில் உள்ள கல்லறைக்கல் மைதானத்தில் 17-வது மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 25 ஆயிரம் சதுர அடியில் ஒரு லட்சம் மலர்ச் செடிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கண்காட்சி இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த கண்காட்சியானது ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நடப்பாண்டில் இந்த கண்காட்சியைக் காண சுமார் 5 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.