மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே காவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ள பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர், உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஒட்டுநராக பணியாற்றி வந்தார். முத்தையன் பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில், காவலர் முத்துக்குமார் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார்.
காவலருடன் வந்த கள்ள பட்டியைச் சேர்ந்த ராஜாராம் என்பவரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.