உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்களாக இந்தியர்கள் உருவெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் நடைபெற்ற அகில இந்திய ஆராய்ச்சி மாணவர்களுக்கான மாநாட்டில் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், எந்தவொரு சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தகவமைத்துக் கொள்ளும் திறன் இந்தியர்களுக்கு உள்ளது என்று தெரிவித்தார்.
2047-ம் ஆண்டில் உலகின் அனைத்து துறைகளிலும் இந்தியர்களே முதலிடம் வகிப்பார்கள் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
இந்தியா அடுத்த ஆண்டில் 15 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் என நம்பிக்கை தெரிவித்த அவர், டிஜிட்டல் பயன்பாட்டில் நாம் முன்னணியில் உள்ளோம் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.