கோவை மாவட்டம் சித்தாபுதூரில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி வேன் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.
சித்தாபுதூரில் கடைகளுக்குப் பொருட்களை டெலிவரி செய்யும் ஆம்னி கார் ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதனை மீண்டும் இயக்க ஆரம்பித்தபோது, திடீரென காரில் இருந்து புகை வர ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து தீ மளமளவெனப் பரவி எரியத் தொடங்கியுள்ளது.
அருகிலிருந்த கடைகளில் இருந்த தீயணைப்பான்களை கொண்டு தீயை அணைக்க முயன்றும் பலனளிக்கவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்தது.