குப்பைகளைத் தரம் பிரிக்கும் திட்டத்தில் கோவை மாநகராட்சி நிர்வாகம் ஊழல் செய்துள்ளதாகக் கூறி அதிமுக கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேயரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர்கள், குப்பைகளைத் தரம் பிரிக்கும் திட்டத்தில் 170 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டினர்.
தொடர்ந்து மாமன்ற கூட்டத்திலிருந்து வெளியேறிய அதிமுக கவுன்சிலர்கள், விக்டோரியா ஹால் வளாகத்தில் குப்பைகளைக் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.