புதிய கல்விக் கொள்கையின்படி சிபிஎஸ்இ பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் மாற்றப்பட்டுள்ளன. ஏற்கனவே இரண்டு, மூன்று மற்றும் 6ம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் மாற்றப்பட்டன.
இந்த நிலையில் தற்போது 7 மற்றும் 8ம் வகுப்புக்கான புதிய பாடப் புத்தகங்கள் வெளியாக உள்ளன. இந்த புத்தகங்களில் புதிய சீர்திருத்தங்களின் படி பாடங்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், புத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் கிடைக்கும் வரை புதிய பாடங்கள் குறித்த அறிமுக வகுப்பை நடத்த சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.