ரம்ஜான் பண்டிகை நெருங்குவதையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மசூதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பல் பகுதியில் ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் பாரம்பரிய மிக்க ஹரிஹர கோயில் இருந்ததாகவும், முகலாய மன்னா் பாபா், கோயிலின் ஒரு பகுதியை இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் புகார் எழுந்தது.
இதுதொடர்பான வழக்கில் சம்பல் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஜாமா மசூதியில் கடந்தாண்டு நவம்பர் 24-ஆம் தேதி நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை வெடித்தது.
எனினும் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையொட்டி சம்பல் மசூதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.