புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திலகர் திடலில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மேலும், பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு சிறப்பு துவா ஓதினார்.
இதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதாக கூறி திமுக பொய் பிரசாரம் செய்வதாக தெரிவித்துள்ளார்.
வக்பு சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியாத திமுக, யாரை காப்பாற்றுவதற்காக வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.