கடலூர் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பூவராக பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி முடிந்து சுவாமி ஊர் திரும்பும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
ஸ்ரீமுஷ்ணத்தில் பிரசித்தி பெற்ற பூவராக பெருமாள் கோயில் அமைந்துள்ளது. மாசி மக உற்சவத்தை முன்னிட்டு கிள்ளை கிராமத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியில் பங்கேற்ற பெருமாள், மீண்டும் ஸ்ரீமுஷ்ணம் திரும்பினார்.
அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி பூவராக பெருமாளுக்கு வரவேற்பு அளித்தனர்.