காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தங்க தேர் உற்சவம் நடைபெற்றது.
பங்குனி மாத திருவிழாவை ஒட்டி நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில், காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, நீல நிற பட்டு உடுத்தி, பல்வேறு மலர்களால் அலங்கரித்தவாறு தங்கத்தேரில் எழுந்தருளினார். தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.